election commission twitter
இந்தியா

மிசோரம், சட்டீஸ்கர், ம.பி, ராஜஸ்தான், தெலங்கானா.. 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிப்பு - முழுவிபரம்

மிசோரம், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்குச் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Prakash J

5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிப்பு

மிசோரம் மாநில சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பர் 17ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட 4 மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் ஜனவரி மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் நிறைவடைகிறது. ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தலைமைதான ஆட்சியும், மத்தியப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சியும், தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ரிய சமதி தலைமையிலான ஆட்சியும், மிசோரமில் மிசோ தேசிய முன்னணி தலைமையிலான ஆட்சியும் நடைபெற்று வருகிறது

இதில் சட்டீஸ்கர் மாநிலம் 90 சட்டப்பேரவை தொகுதிகளையும், மத்தியப் பிரதேசம் 230 தொகுதிகளையும், ராஜஸ்தான் 200 தொகுதிகளையும், தெலங்கானா 119 தொகுதிகளையும், மிசோரம் 40 தொகுதிகளையும் கொண்டுள்ளன. இந்த நிலையில், மிசோரம், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்குச் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே மற்றும் அருண் கோயல் ஆகியோர் தேர்தல் குறித்து அறிவிப்பை வெளியிட்டனர்.

இதையும் படிக்க: லடாக் கவுன்சில் தேர்தல்: காங்கிரஸ் - என்.சி கூட்டணி அபார வெற்றி.. கடுமையான தோல்வியைச் சந்தித்த பாஜக!

நவம்பர் 7இல் ஆரம்பமாகும் 5 மாநில தேர்தல்கள்

அதன்படி, மிசோரமில் நவம்பர் 7ஆம் தேதியும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதியும், தெலங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 23ஆம் தேதியும், சட்டீஸ்கரில் மாநிலத்தில் மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

முதல்கட்டத்தில் 20 தொகுதிகளுக்கும் இரண்டாவது கட்டத்தில் 70 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த 5 மாநிலங்களுக்கும் ஒட்டுமொத்தமாக டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அது அறிவித்துள்ளது.

சட்டீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்

Chhattisgarh

வாக்குப்பதிவு: நவம்பர் 7, 17

வாக்கு எண்ணிக்கை: டிசம்பர் 3

மனுத்தாக்கல் ஆரம்பம்: அக்டோபர் 13

மனுத்தாக்கல் முடிவு: அக்டோபர் 20

வேட்புமனு பரிசீலனை: அக்டோபர் 21

வேட்புமனு திரும்பப் பெறுதல்: அக்டோபர் 23

இதையும் படிக்க: விபத்தில் உயிரிழந்த நபரை ஆற்றுக்குள் வீசிய போலீசார்.. பீகாரில் அதிர்ச்சி சம்பவம்; வைரலாகும் வீடியோ!

மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்

மிசோரம்

வாக்குப்பதிவு: நவம்பர் 7

வாக்கு எண்ணிக்கை: டிசம்பர் 3

மனுத்தாக்கல் ஆரம்பம்: அக்டோபர் 13

மனுத்தாக்கல் முடிவு: அக்டோபர் 20

வேட்புமனு பரிசீலனை: அக்டோபர் 21

வேட்புமனு திரும்பப் பெறுதல்: அக்டோபர் 23

இதையும் படிக்க: ’அடடே.. சிக்ஸ் போய்விட்டதே..’ கவலைப்பட்ட கே.எல்.ராகுல்! கலகலப்பான ஆடியன்ஸ்.. பின்னணி இதுதான்!

மத்தியப் பிரதேசம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்

மத்தியப் பிரதேசம்

வாக்குப்பதிவு: நவம்பர் 17

வாக்கு எண்ணிக்கை: டிசம்பர் 3

மனுத்தாக்கல் ஆரம்பம்: அக்டோபர் 21

மனுத்தாக்கல் முடிவு: அக்டோபர் 30

வேட்புமனு பரிசீலனை: அக்டோபர் 31

வேட்புமனு திரும்பப் பெறுதல்: நவம்பர் 2

இதையும் படிக்க: இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர்.. ‘1918 - 2023’.. நூற்றாண்டு கால வரலாற்றுப் பின்னணி என்ன? - முழு விளக்கம்

தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்

தெலங்கானா

வாக்குப்பதிவு: நவம்பர் 30

வாக்கு எண்ணிக்கை: டிசம்பர் 3

மனுத்தாக்கல் ஆரம்பம்: நவம்பர் 3

மனுத்தாக்கல் முடிவு: நவம்பர் 10

வேட்புமனு பரிசீலனை: நவம்பர் 13

வேட்புமனு திரும்பப் பெறுதல்: நவம்பர் 15

இதையும் படிக்க: விமானம் தாங்கிக் கப்பலை அனுப்பி இஸ்ரேலுக்கு கைகொடுக்கும் அமெரிக்கா.. ஹமாஸை எச்சரிக்கும் நெதன்யாகு!

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்

ராஜஸ்தான்

வாக்குப்பதிவு: நவம்பர் 23

வாக்கு எண்ணிக்கை: டிசம்பர் 3

மனுத்தாக்கல் ஆரம்பம்: அக்டோபர் 30

மனுத்தாக்கல் முடிவு: நவம்பர் 6

வேட்புமனு பரிசீலனை: நவம்பர் 7

வேட்புமனு திரும்பப் பெறுதல்: நவம்பர் 9

இதையும் படிக்க: வாடிய முகம், சோர்வான தோற்றம்.. என்ன ஆனது செந்தில் பாலாஜிக்கு?