இந்தியா

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று உறுதி

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று உறுதி

sharpana

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில் பொதுமக்கள் மட்டுமல்லாமல் சினிமா துறையினர், அரசியல்வாதிகள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளவர், தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பரிசோதித்துக்கொள்ளும்படி கோரிக்கை வைத்திருக்கிறார்.