இந்தியா

வரட்டியால் விரட்டி விரட்டி ஒருவரையொருவர் அடித்துக்கொள்ளும் வினோத பூஜை!

வரட்டியால் விரட்டி விரட்டி ஒருவரையொருவர் அடித்துக்கொள்ளும் வினோத பூஜை!

JustinDurai

சுவாமிக்கு நடந்த காதல் திருமணத்தின் காரணமாக கிராம மக்கள் இரு பிரிவாக பிரிந்து ஒருவர் மீது ஒருவர் வரட்டியால் அடித்துக்கொள்ளும் வினோத பூஜை நடந்தது. 

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், அஸ்பாரி மண்டலத்தில் உள்ள கைருப்பாலா கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி மறுநாள் 'பிடக்க' (வரட்டி) எனும் திருவிழா நடைபெறுவது வழக்கம். வருகிறது. பத்ரகாளியும் வீரபத்ர சுவாமியும் காதலித்து கொண்டதாகவும் இந்த காதலை ஏற்க மறுத்த பெற்றோர்கள் இருதரப்பினரையும் பிரித்ததால் சண்டை ஏற்பட்டதாகவும் பின்னர் சமாதானமாக அனைவரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.

அதேபோன்று யுகாதி மறுநாளன்று கைருப்பாலா கிராமவாசிகள் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் சாணத்தால் தயார் செய்யப்பட்ட வரட்டியை சுவாமிக்கு பிரசாதமாக கொண்டு வந்து சமர்ப்பித்தனர்.

சமர்ப்பிக்கப்பட்ட வரட்டிகளை கிராமவாசிகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டன. இந்த சிறிய காயங்களுக்கு சுவாமியின் மஞ்சள் பூசிக்கொண்டனர் இதன் மூலம் காயங்கள் குணமாகும் என்று கிராம மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.