ஆண்ட்ராய்டு செல்போனில் பதிவேற்றப்படும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயலிகள் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதாகவும், பயனர்களின் அனுமதியின்றி மற்ற செயலிகளுக்கு பகிர்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தனிப்பட்ட தகவல்களை திருடி, வணிகர்கள், விளம்பர நெட்வொர்க்குகள், கிளவுட் சர்வீஸ் புரொவாய்டர்ஸ் மற்றும் தேடுபொறி வழங்குநர்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பகிர்கின்றன. சர்வதேச கணினி அறிவியல் நிறுவனத்தின் ஆய்வுப்படி, கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படக்கூடிய ஆயிரத்து 325 செயலிகள் இத்தகைய சர்ச்சையில் சிக்கியுள்ளன.
ஒவ்வொரு செயலியை பதிவிறக்கம் செய்யும் போது உங்களுடைய தகவல்களை இந்த செயலி ஊடாக பயன்படுத்த அனுமதிக்கலாமா அல்லது மறுக்கலாமா என கேட்கும். அதில் மறுக்கலாம் என தேர்வு செய்யப்படும் பயனர்களின் தகவல்களையும் அந்த செயலி எடுத்துக்கொள்கிறது. மேலும் ஒரு செயலியிலிருந்து பிற செயலிகளுக்கு தனிப்பட்ட ரகசியங்கள் கடத்தப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
செயலியின் நம்பகத்தன்மை அறிந்து பதிவிறக்கம் செய்வதைவிட, கூடுமான வரையிலும் இணையத்தை பயன்படுத்துவதும், பயன்பாட்டிற்கு பிறகு குறிப்பிட்ட செயலியை மொபைலிருந்து அழிப்பதே சரியான தீர்வாக இருக்கும் என்றும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.