இந்தியா

மருத்துவர்கள் போராட்டம் - ஜிப்மருக்கு வந்த நோயாளிகள் திரும்பி சென்றனர்

மருத்துவர்கள் போராட்டம் - ஜிப்மருக்கு வந்த நோயாளிகள் திரும்பி சென்றனர்

webteam

மருத்துவரகள் போராட்டம் காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் திரும்பி சென்றனர்.

மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் தாக்கப்பட்டத்தைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்கள் இன்று சேவை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் எச்சரிக்கையை மீறி 6 நாட்களாக போராடி வருகின்றனர். 

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மம்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் எனவும் ஆனால் ஊடகங்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமெனவும் மருத்துவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். இதையடுத்து இன்று போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து தினந்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வெளிப்புற சிகிச்சைக்கு வருகின்றனர்.

 இன்று நாள் முழுவதும் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரியில் இருந்தும் வெளிப்புற சிகிச்சை பெற வந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் திரும்பி சென்றனர்.