உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் பகுதியில் உள்ள கங்கை நதியில் புனித நீராட சாதுக்கள் மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் பகுதியில் பல ஆசிரமங்களை சேர்ந்த சாதுக்கள் உள்ளனர். இவர்கள் விஜயதசமியை முன்னிட்டு புனித நதிகளில் நீராடுவது வழக்கம். ஆனால் இங்குள்ள கங்கை நதியில் தொழிற்சாலை கழிவுகள் கலந்து, நதி கறுப்பு நிறமாகக் காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள சாதுக்கள் புனித நீராட மறுத்துவிட்டனர். இதனையடுத்து முசாபர்நகர் நிர்வாகம் கங்கை நதியை அதிவேகமாக தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.