இந்தியா

ஜெகன் மோகன் ரெட்டி கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி?

ஜெகன் மோகன் ரெட்டி கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி?

webteam

மக்களவை துணை சபாநாயகர் பதவியை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு வழங்க பாரதிய ஜனதா முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக, பாரதிய ஜனதா செய்தித் தொடர்பாளரும் ஆந்திராவைச் சேர்ந்தவருமான ஜி.வி.எல் நரசிம்ம ராவ், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை நேற்று சந்தித்துப் பேசியுள்ளார். ஆந்திராவில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 22 இடங்களில் வென்றுள்ளது. அக்கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி அளிப்பதன் மூலம், முக்கிய மசோதாக்களை அக்கட்சியின் ஆதரவைப் பெற்று நிறைவேற்ற பாரதி‌ ஜனதா திட்டமிடுவதாக தெரிகிறது. 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வது, பொது சிவில் சட்டம் உள்ளிட்ட அரசியலமைப்பு சட்டங்களைத் திருத்த அவையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை என்பதால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸுடன் நெருக்கமாக இருக்க பாரதிய ஜனதா முயற்சிப்பதாக கூறப்படுகிறது. எனினும், மக்களவை துணை சபாநாயகர் பதவியை ஏற்பது குறித்து பதிலளிக்க ஜெகன் மோகன் ரெட்டி அவகாசம் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.