இந்தியா

“புழுதிப் புயல் - கொட்டும் மழை” டெல்லியை திடீரென மாற்றிய வானிலை

“புழுதிப் புயல் - கொட்டும் மழை” டெல்லியை திடீரென மாற்றிய வானிலை

rajakannan

தலைநகர் டெல்லியில் புழுதிப் புயலும், மழையும் ஒரு சேர வெளுத்து வாங்குவதால் டெல்லி மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

மஹாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட அரபிக் கடலை ஒட்டிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி வருகிறது. இன்றும் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், டெல்லியில் பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது. காலை முதலே வெயில் கொளுத்தி வந்த நிலையில், மாலையில் திடீரென வானிலை மாறியது. புழுதிப் புயல் வீசும் அதேவேளையில் மழையும் வெளுத்து வாங்குகிறது.

முன்னதாக, டெல்லியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. 70 முதல் 80 கி.மீ. வேகம் வரை காற்று வீசும் என்றும், புழுதிப்புயலுடன் கூடிய லேசான மழையும் பெய்யும் என்றும் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேர வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டு இருந்தது. 

மழை காரணமாக டெல்லியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. புழுதிப்புயல் காரணமாக 18 விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன. வானம் முழுவதும் கரு மேகங்கள் உள்ளதால் நகரே இருள் சூழ்ந்தது போல் காட்சியளிக்கிறது.