இந்தியா

டெல்லி வன்முறை: ராகுலை குற்றம்சாட்டும் பாஜக-அமித்ஷாவை பதவிநீக்கம் செய்யக்கோரும் காங்கிரஸ்

டெல்லி வன்முறை: ராகுலை குற்றம்சாட்டும் பாஜக-அமித்ஷாவை பதவிநீக்கம் செய்யக்கோரும் காங்கிரஸ்

Veeramani

குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டெல்லி டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட குழப்பம் குறித்து காங்கிரசும், பாரதிய ஜனதா கட்சியும் மாறி மாறி குற்றம் சாட்டிக்கொண்டன.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,  “நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்காக, விவசாயிகளின் போராட்டத்தை காங்கிரஸ் ஊக்கப்படுத்துகிறது. ராகுல் காந்தி போராட்டத்தை ஆதரிப்பது மட்டுமல்லாமல், தூண்டும் வேலையையும் செய்கிறார்" என்று கூறினார். மேலும்சிஏஏ போராட்டத்தின்போது இதுதான் நடந்தது, காங்கிரஸ்தான் இந்த பேரணிகளை நடத்துகிறது, அவர்கள்தான் மக்களை வீதிகளில் இறங்க தூண்டுகிறார்கள். இது ஒரு இறுதிப் போராட்டம் என்று 26 ஆம் தேதி சில உழவர் தலைவர்கள் கூறியபோது, பஞ்சாப் அரசு மாநிலத்திலிருந்து புறப்படும் டிராக்டர்களைக் கண்காணித்து, வழக்கமான குற்றவாளிகளைத் கைது செய்திருக்க வேண்டும், ”என்று கூறினார்.

இப்போராட்டம் தொடர்பாக காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில் “நரேந்திர மோடி அரசு விவசாயிகளின் போராட்டத்தை கெடுக்கும் ஒரு சதித்திட்டத்தில் ஈடுபட்டது. காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்படாமல் 500 பேர் செங்கோட்டை போன்ற ஒரு பாதுகாப்புமிக்க வளாகத்திற்குள் எப்படி நுழைய முடியும்” என கேள்வியெழுப்பினார்.

மேலும்இந்த வன்முறை என்பது உள்துறையின் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு மற்றும் உளவுத்துறையின் தோல்வி. இதற்கு காரணமான அமைச்சர் அமித்ஷாவை உடனடியாக தனது பதவியில் இருந்து நீக்க வேண்டும் . அமித்ஷா பிரதமரால் பதவி நீக்கம் செய்யப்படாவிட்டால், பிரதமரும் இந்த விவசாயிகளை இழிவுபடுத்தும் கூட்டு சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தார் என்பது தெளிவாகும்” என்றும் குற்றம் சாட்டினார்