டெல்லி நிஜாமுதீன் பகுதியில் கொரோனா பரவும் வகையில் அலட்சியமாக செயல்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு தங்கி இருந்த 2 ஆயிரத்து 361 பேரும் வெளியேற்றப்பட்டதாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். இவர்களில் 617 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், மற்ற அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமானோர் டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இங்கிருந்து சொந்த ஊர் திரும்பியவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் கண்டறிந்து பரிசோதனை செய்யும் பணிகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பரவும் வகையில் அலட்சியமாக செயல்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 6பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி மாநாட்டில் கர்நாடகாவை சேர்ந்த 300 பேர் கலந்து கொண்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் மாநாடு நடத்திய தப்லீக் ஜமாஅத்தின் செயல் தாலிபான்களின் நடவடிக்கை போல் இருப்பதாக, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி குற்றம்சாட்டியுள்ளார்.