டெல்லியில் இன்று இரவு முதல் ஒருவாரம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், மதுக்குடிப்போர்கள் மதுக்கடைகளில் கூட்டம் கூட்டமாக வரிசையில் நின்று மதுவாங்கி வருகிறார்கள்.
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, டெல்லியில் சற்று முன்பு ஒரு வார காலம் முழு ஊரடங்கிற்கு மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். இதன்மூலமாக இன்று இரவு முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி காலை வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கின்போது மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டதால், இன்று இரவுக்குள் மதுவினை வாங்கி வைக்கும் ஆவலில் டெல்லியில் உள்ள அனைத்து மதுக்கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டத்தினை வரிசைப்படுத்த போலீசார் போராடி வருகிறார்கள்.