இந்தியா

ட்விட்டரில் ப்ளூ டிக் கோரிய முன்னாள் சிபிஐ அதிகாரிக்கு அபராதம் விதித்த டெல்லி நீதிமன்றம்!

ட்விட்டரில் ப்ளூ டிக் கோரிய முன்னாள் சிபிஐ அதிகாரிக்கு அபராதம் விதித்த டெல்லி நீதிமன்றம்!

நிவேதா ஜெகராஜா

தனது ட்விட்டர் சமூக வலைதள பக்கத்திற்கு ப்ளூடூத் அங்கீகாரத்தை வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்த சிபிஐயின் முன்னாள் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.

சிபிஐ அமைப்பின் இடைக்கால தலைவராக இருந்தவர் நாகேஸ்வரராவ். இவர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வந்த நிலையில் இவரது ட்விட்டர் சமூக வலைதள பக்கத்திற்கு, அந்நிறுவனம் வழங்கியிருந்த ப்ளூடூத் அங்கீகாரத்தை ரத்து செய்திருந்தது. இது தொடர்பாக இவர் தாக்கல் செய்திருந்த மனுவை ஏற்கனவே விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் நிறுவனத்திற்கு சில அறிவுறுத்தல்களை கொடுத்திருந்தார்கள்.

இதற்கிடையில் நாகேஸ்வரராவ் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் தனக்கு ப்ளூடிக் அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை என அவர் கூறியிருந்தார். இந்த மனு இன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, `நாங்கள் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி தான் உத்தரவு பிறப்பித்தோம். ஆனால் அதற்குள் இந்த நீதிமன்றத்தை நீங்கள் நடுவதற்கான அவசர தேவை என்ன வந்தது?’ என கேள்வி எழுப்பினர்.

மேலும் பேசுகையில், “நாகேஸ்வரராவுக்கு நிறைய நேரம் இருக்கிறது போலும்... அதனால்தான் இத்தகைய மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். நீங்கள் பதில் பரிசையும் எதிர்பார்க்கின்றீர்கள். அப்பரிசாக, நாங்கள் உங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதுடன் மனுவையும் தள்ளுபடி செய்கிறோம்” என உத்தரவு பிறப்பித்தனர்.