டெல்லியில், 20 சதவிகித படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கத் தவறும் தனியார் மருத்துவமனைகள், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவமனைகளாக மாற்றி அர்ப்பணிக்கப்படும் என்று அம்மாநில அரசு எச்சரித்துள்ளது.
இந்தியாவை பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,26,713 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,363 ஆக உள்ளது.
இந்நிலையில் ஆன்லைன் வாயிலாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா, மக்களின் உயிரைக் காப்பதிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலுமே அரசு முழு கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார்.
20 சதவிகித படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை இன்றைக்குள் நிறைவேற்றாத தனியார் மருத்துவமனைகள், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவமனைகளாக மாற்றி அர்ப்பணிக்கப்படும் என்று மனிஷ் சிசோடியா எச்சரித்தார்.