2021 - 22 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை ‘தேசபக்தி’ கருப்பொருளை அடிப்படையாக கொண்டு தாக்கல் செய்துள்ளது டெல்லியை ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் அரசு. சுமார் 69000 கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா. இவர் டெல்லி அரசின் நிதி அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.
நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் முடிவில் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது டெல்லி அரசு. வரும் மார்ச் 12 தொடங்கி 75 வாரங்களுக்கு பல்வேறு நிகழ்வுகளை நடத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.
“பள்ளிகளில் தேசபக்தி பாட நேர வகுப்பு, சுமார் 45 கோடி ரூபாய் செலவில் 500 இடங்கிளில் உயரமான கோபுரங்களில் தேசிய கோடியை பறக்க விடுவது, பகத் சிங் வாழ்க்கை வரலாற்றை போற்றுவது, தனி நபர் வருமானத்தை 2047இல் சிங்கப்பூருக்கு நிகராக அதிகரிப்பது என பல்வேறு திட்டங்களை கொண்டுள்ளோம்” என நிதி அமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.