பிரான்ஸிடம் இருந்து முதல் ரஃபேல் போர் விமானத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக் கொண்டார்.
சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன் அடிப்படையில், முதல் நான்கு ரஃபேல் போர் விமானங்கள் இன்று முறைப்படி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும், இந்த விமானங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு மே மாதம் தான் இந்தியா வந்து சேரும்.
முதல் ரஃபேல் போர் விமானத்தை பெற்றுக் கொள்வதற்காக டெல்லியில் இருந்து புறப்பட்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாரிஸ் சென்றடைந்தார். போர்டோவில் முறைப்படி ரஃபேல் போர் விமானத்தை ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து விமானத்துக்கு இந்திய கலாசாரப்படி ஆயுதப் பூஜை நடத்தும் ராஜ்நாத் சிங், சிறிது நேரம் விமானத்தில் பறக்கவும் திட்டமிட்டிருப்பதாக பாதுகாப்புத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.