இந்தியா

‘டிகோடிங் மொபைல் & டிஜிட்டல் இன் சவுத் இந்தியா’ - டிச.10இல் இணைய வழி மாநாடு

‘டிகோடிங் மொபைல் & டிஜிட்டல் இன் சவுத் இந்தியா’ - டிச.10இல் இணைய வழி மாநாடு

EllusamyKarthik

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் மீடியா அவுட்சோர்சிங் நிறுவனமான ஃபோர்த் டைமன்ஷன் மீடியா சொல்யூஷன்ஸ் நிறுவனம் வரும் டிசம்பர் 10 ஆம் தேதியன்று ‘டிகோடிங் மொபைல் மற்றும் டிஜிட்டல் இன் சவுத் இந்தியா’ மாநாட்டை இணைய வழியில் நடத்த திட்டமிட்டுள்ளது. 

தொலைக்காட்சி, ரேடியோ, அச்சு இதழ் என தடம் பதித்துள்ள ஃபோர்த் டைமன்ஷன் நிறுவனம் யூடியூப்  சேனல்கள், டிஜிட்டல், கேபிள் மற்றும் அவுட்டோரிலும் இந்தியா முழுவதும் தனது இருப்பை உறுதி செய்துள்ளது. அதற்காகவே சென்னை, மும்பை மற்றும் டெல்லியில் அலுவலகம் அமைத்துள்ளது. 

2018 மற்றும் 2019 இல் தென்னிந்திய அளவிலான ஊடக கருத்தரங்கம், 2019 இல் கோவை நகரில் மொபைல் மற்றும் மற்றும் டிஜிட்டல் மீடியா மற்றும் மதுரையில் மீடியாவின் மாறிவரும் சூழல் குறித்தும் கருத்தரங்கையும் இந்நிறுவனம் ஒருங்கிணைத்து உள்ளது. அது மட்டுமல்லாது இதற்கு முன்னதாக இணைய வழி மாநாடு மற்றும் கருத்தரங்கை இந்நிறுவனம் நடத்தி உள்ளது. 

இம்முறை ‘ டிகோடிங் மொபைல் மற்றும் டிஜிட்டல் இன் சவுத் இந்தியா’ என்ற தலைப்பில் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் கலந்துரையாடவும், பார்வையாளர்களுக்கு வழிகாட்டவும் உள்ளது. துறை சார்ந்த வல்லுநர்கள் இந்த இணைய வழி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். அதில் வழக்கமான ஊடக செயல்பட்டிலிருந்து தென்னிந்தியாவில் ஊடகங்கள் டிஜிட்டலுக்கு மாறிவரும் நிலை குறித்து விரிவாக அலசப்பட உள்ளது. 

“கதைசொல்லிகளாக எங்களுடைய பார்வை எப்போதுமே தென்னிந்தியாவின் பக்கம் தான் இருக்கும். மொபைல் மற்றும் டிஜிட்டல் பயனர்களின் பயன்பாட்டை ஆராய விரும்பி இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஷங்கர்.