இந்தியா

கேரள நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம்: பிரதமர் மோடி !

கேரள நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம்: பிரதமர் மோடி !

jagadeesh

கேரள மாநிலம் இடுக்கியில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி தேயிலை எஸ்டேட்டி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் தொடர் குடியிருப்பு முழுவதும் மண் மூடியது. இதில் 80 க்கும் அதிகமானோர் மண்ணிற்குள் புதைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வாகனங்கள் செல்ல முடியாத பகுதி என்பதால் மீட்பு பணியில் சிரமமும் தொய்வும் ஏற்பட்டுள்ளது.

பத்து பேர் உயிருடன் மீட்கப்பட்டு மூணாறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்போதுவரை 17 பேர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார் அதில் "இடுக்கி மாவட்டம் ராஜமலை பகுதியில் நிலச்சரிவில் உயிரிழப்பை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணடைய பிரார்த்திக்கிறேன். தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்துவிதமான உதவிகளையும் செய்து வருகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

மேலும் "இடுக்கி நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்" என மோடி அறிவித்துள்ளார்.