இந்தியா

‘சீட் பெல்ட் அணியாததால் ஓட்டுநர் உரிமம் ரத்து’ - இறந்தவர் வீட்டுக்கு வந்த ரசீது

‘சீட் பெல்ட் அணியாததால் ஓட்டுநர் உரிமம் ரத்து’ - இறந்தவர் வீட்டுக்கு வந்த ரசீது

webteam

8 வருடத்திற்கு முன்னர் இறந்தவரின் ஓட்டுநர் உரிமத்தை தற்போது ரத்து செய்வதாக போக்குவரத்துறை கடிதம் அனுப்பிய சம்பவம் ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது.

ராஜஸ்தானில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மற்றும் பாதசாரிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டும் நபரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யுமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் ராஜஸ்தானின் ஜாலாவார் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திர கேசரா என்பவரது வீட்டிற்கு போக்குவரத்துறையிடம் இருந்து கடிதம் ஒன்று வந்துள்ளது. அதைக்கண்ட ராஜேந்திர கேசராவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். 

ஏனென்றால் அந்தக் கடிதத்தில் ராஜேந்திர கேசராவின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும், அதிவேகமாக காரில் சென்றதற்காவும் சீட் பெல்ட் அணியாததற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டிருந்துள்ளது. உண்மையில் கடந்த 2011ஆம் ஆண்டே கேசரா இறந்துவிட்டார். அதுமட்டுமின்றி அவர் உயிருடன் இருந்த வரையில் காரோ அல்லது வேறு ஏதேனும் 4 சக்கர வாகனமோ வைத்திருக்கவில்லை என அவர்கள் குடும்பத்தினர் கூறியுள்ளனர். மேலும், அவர் ஒரு பைக் மட்டுமே வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.