இந்தியா

குஜராத்தை புரட்டி போட்ட டவ் தே புயலுக்கு 13 பேர் உயிரிழப்பு; 16,000 வீடுகள் சேதம்

குஜராத்தை புரட்டி போட்ட டவ் தே புயலுக்கு 13 பேர் உயிரிழப்பு; 16,000 வீடுகள் சேதம்

JustinDurai

குஜராத்தை புரட்டி போட்ட டவ் தே புயலுக்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர். 16 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன.

அரபிக் கடலில் உருவான டவ் தே புயல் செவ்வாய்கிழமை அன்று குஜராத்தில் கரையை கடந்தது. வடக்கு குஜராத்தில் மட்டும் 46 தாலுக்காவில் நூறு மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவானதால், தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழந்துள்ளன. மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூறாவளியால் 16 ஆயிரம் வீடுகள் சேதமடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

40 ஆயிரம் மரங்கள், 70 ஆயிரம் மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்துள்ளன. இதனால் சுமார் 6 ஆயிரம் கிராமங்கள் இருளில் மூழ்கியிருப்பதாக அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். மழை வெள்ளத்தால் நெற்பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தள்ளன. மா, தென்னை விவசாயமும் பாதிக்கபட்டதை அடுத்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் விஜய் ரூபானி கூறியுள்ளார்.

இதற்கிடையே குஜராத்தின் அம்ரெலி, பாவ்நகர், நவ்சாரி, உள்ளிட் பகுதிகளில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.