இந்தியா

கோவாக்சின்: விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டதில் வெற்றி

கோவாக்சின்: விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டதில் வெற்றி

jagadeesh

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி மருந்தான கோவாக்சினை விலங்குகளுக்கு செலுத்தி நடைபெற்ற பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது.

ஒவ்வொரு தடுப்பூசி மருந்தும் மனிதர்களுக்கு பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக விலங்குகளுக்கு கொடுக்கப்படும். அதன்படி மனிதர்களை ஒத்த கல்லீரல் செயல்பாடுகள் கொண்ட குரங்கு, நாய், தவளை போன்ற விலங்குகளுக்கு அந்த மருந்து செலுத்தப்பட்டு சோதனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி குரங்குகளுக்கு செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

இதில் குரங்குக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் வளர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் கொரோனா தொற்று பாதைகளான நுரையீரல், சுவாச பாதை முழுவதும் நோய் எதிர்ப்பாற்றல் பெற்றிருப்பது ஆய்வு முடிவில் தெரிய வந்திருக்கிறது. மனிதர்களுக்கு செலுத்தும் முன் விலங்குகளில் நடத்தப்படும் இந்த தடுப்பூசி சோதனையில் கோவாக்சின் தடுப்பூசி வெற்றி பெற்றிருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.