இந்தியா

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடக்கம்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடக்கம்

Sinekadhara

இந்தியாவில் பஞ்சாப், குஜராத், ஆந்திரா, அசாம் ஆகிய மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை பணி தொடங்கியுள்ளது.

இந்தியாவில் தற்போது பஞ்சாப், குஜராத், ஆந்திரா, அசாம் ஆகிய நான்கு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை தொடங்கி நடைபெற்றுவருகிறது. மத்திய அரசு 'CoWin' என்ற பிரத்யேக செயலியை வடிவமைத்து அதன்மூலம் ஒத்திகை தகவல்கள் சேமிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசியை பல்வேறு இடங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்வது, குளிரூட்டப்பட்ட வசதிகளில் சேமிப்பது, மருத்துவமனைகளுக்கு விநியோகிப்பது, பயணிகளுக்கு தடுப்பூசி போடுவது மற்றும் தடுப்பூசி போட்டபின் ஏற்படும் ஒவ்வாமை பிரச்னைகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட சிக்கல்களை எதிர்கொள்ளவும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போடும் திட்டத்திற்காக இரண்டாயிரத்து 360 பயிற்சி முகாம்கள் மூலம் 7 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மூலம் 4 மாநிலங்களிலும் ஒத்திகை பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஒத்திகையின்போது ஏற்படும் சாதகம், பாதகங்கள் குறித்த தகவல்கள் இந்த செயலியில் சேகரிக்கப்பட்டு மத்திய அரசிடம் அறிக்கை சமர்பிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது .