இந்தியா

புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு போலீஸ் செய்த தொந்தரவு

புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு போலீஸ் செய்த தொந்தரவு

Rasus

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண், அது குறித்து போலீசிடம் புகார் கொடுக்க வந்தபோது போலீசாரும் அவருடன் உடலுறவில் ஈடுபடுமாறு நிர்பந்தித்துள்ளார்.

பெங்களூருவை சேர்ந்தவர் தாரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த பிப்ரவரி மாதம், உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்புகையில் இரண்டு பேர் லிப்ட் கொடுத்துள்ளனர். அப்போது தாராவின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த இரண்டு பேரும், தாராவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். இதுதொடர்பாக போலீசில் தாரா புகார் அளித்தும் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்ய மறுத்திருக்கின்றனர். பின்னர் தாரா இதுதொடர்பாக உள்ளூர் நீதிமன்றத்தை நாட, இரண்டு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தாராவை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரும் தற்போது மீண்டும் அவரை சுற்றி சுற்றி வரவே பயந்து போன தாரா இதுகுறித்து போலீசாரிடம் புகார் தெரிவிக்க ராம்பூரில் உள்ள கஞ்ச் போலீஸ் நிலையத்தை நாடியிருக்கிறார். தனக்கு பாலியல் கொடுமை செய்த இரண்டு பேரையும் கைது செய்யுமாறு வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் அங்கிருந்த விசாரணை அதிகாரியோ, தாராவிடம் " முதலில் என் விருப்பத்தை நிறைவேற்று.. அப்புறம் உன் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்" என்றிருக்கிறார். மேலும் நான் தனியாக இருக்கும் போது எங்கள் வீட்டுக்கு வா என்றும் அழைத்திருக்கிறார். இதனால் மீண்டும் சோர்ந்து போன தாரா, வீட்டிற்கே திரும்பிவிட்டார். பின்னர், மறுமுறையும் அந்த போலீசாரிடம் உதவிக்கு நாடிய போது, அவர் பேசியதை ஆடியோவில் சாமர்த்தியமாக பதிவு செய்துவிட்டார் தாரா. இதுதொடர்பாக தேவையான ஆடியோ ஆதாரத்துடன், எஸ்.பி.யிடம் தாரா முறையிட இதுகுறித்து விசாரணை நடத்த எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.