இந்தியா

சட்டப்பேரவையை கூட்ட ஆளுநருக்கு முகுல் ரோத்தஹி ஆலோசனை

சட்டப்பேரவையை கூட்ட ஆளுநருக்கு முகுல் ரோத்தஹி ஆலோசனை

webteam

சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை கூட்ட ஆளுநருக்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி யோசனை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரனமான அரசியல் சூழ்நிலை சமாளிப்பது குறித்து தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மத்திய அரசிடம் ஆலோசனை கேட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை கூட்ட தமிழக ஆளுநருக்கு யோசனை கூறியுள்ளார். பெரும்பான்மையை தீர்மானிக்க அது ஒன்றே வழியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சசிகலா மீதான சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு வரும் வரை காத்திருப்பது நல்லது அதேசமயத்தில் நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்வது நல்லதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.