இந்தியா

வாட்ஸ் அப், ஓடிடி போன்ற தகவல் தொடர்பு செயலிகளை கண்காணிக்க தேவையில்லை : TRAI 

வாட்ஸ் அப், ஓடிடி போன்ற தகவல் தொடர்பு செயலிகளை கண்காணிக்க தேவையில்லை : TRAI 

EllusamyKarthik

வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மெசஞ்சர், கூகுள் சேட், ஸ்கைப், டெலிகிராம், ஜூம் மாதிரியான இணையதள இணைப்பில் இயங்கும் உலகளாவிய தகவல் தொடர்பு அப்ளிகேஷன்கள் இந்தியாவில் இயங்க எந்தவித எந்தவித கட்டுப்பாட்டு ஒழுங்குமுறையும் இப்போதைக்கு பின்பற்ற தேவையில்லை என தெரிவித்துள்ளது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI).  

இந்த அறிவிப்பு மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத்தின் கருத்துக்கு முரணாக அமைந்துள்ளது. 

‘வாட்ஸ் அப்பில் சமூக விரோதிகளும், தேச துரோகிகளும் பரப்புகின்ற தகவல்கள் எங்கிருந்து பகிரப்பட்டது என்பதை அடையாளம் காண்பதற்கான தொழில்நுட்ப மெக்கானிசங்கள் வேண்டும். இதன் மூலம் சட்ட ஒழுங்கையும், நாட்டின் பாதுகாப்பையும் காக்கலாம்’ என மத்திய அமைச்சர் கடந்த 2019 ஜூலையில் தெரிவித்திருந்தார். 

‘சட்டத்தின் பார்வைக்கு உட்பட்டு இயங்கும் டெலிகாம் நிறுவனங்களுக்கு இருப்பது போல OTT தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கான கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை இல்லாதது தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தான்’ என செல்லுலார் ஆப்பிரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியாவும் தெரிவித்துள்ளது.

தற்போது பின்பற்றப்பட்டு வருகின்ற சட்ட நெறிமுறைகளே தகவல் தொடர்பு அப்ளிகேஷன்களுக்கு தொடரும் எனவும் TRAI அறிவித்துள்ளது.