ஸ்டாலின் -ராமதாஸ் முகநூல்
இந்தியா

"சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கைகோர்த்த மர்மம் என்ன?" - கேள்வி எழுப்பிய ஸ்டாலின்

பாஜக கூட்டணி: ராமதாஸின் அரசியல் நோக்கம் என்ன?

PT WEB

சமூகநீதி பேசும் ராமதாஸ், சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க.வுடன் கைகோர்த்த மர்மம் என்ன? என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தருமபுரி மாவட்டம், தடங்கம் பகுதியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் தருமபுரி தொகுதி திமுக வேட்பாளர் மணி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை அறிமுகப்படுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு கேட்டார்.

அப்போது பேசிய அவர், “ சாதிவாரி கணக்கெடுப்பிற்கு பாஜக முட்டுக்கட்டை போட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநில அரசிடம் இல்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள ராமதாஸ் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பிரதமர் மோடியிடம் உத்தரவாதம் பெற்றாரா? .பாமகவின் கொள்கைளுக்கு நேர் எதிராக பயணிக்கும் பாஜகவுடன் ராமதாஸ் கூட்டணி வைத்ததன் மர்மம் என்ன?.

திமுகவின் தேர்தல் அறிக்கையை பார்த்து 100 நாள் ஊதியத்தை பாஜக அரசு உயர்த்தியுள்ளது. தேர்தலில் போட்டியிட பணம் இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி இருக்கிறார். ஆனால், தேர்தல் பத்திரம் மூலம் பாஜக பெற்ற பணம் எங்கே போனது?” என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.