இந்தியா

தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கக் கோரும் விவகாரம் - எதிர்க்கட்சிகளின் மனு தள்ளுபடி

தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கக் கோரும் விவகாரம் - எதிர்க்கட்சிகளின் மனு தள்ளுபடி

rajakannan

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான தகுதி நீக்க தீர்மானம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை அரசியல் சாசன அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. 

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பாரபட்சம் காட்டுகிறார் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைக் கூறி, அவரை பதவி நீக்கம் செய்யுமாறு காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் மனு அளித்தனர். அந்த மனுவை வெங்கய்ய நாயுடு நிராகரித்த நிலையில், அதற்கு எதிராக காங்கிரஸ் எம்பிக்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர். 

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஏ.கே.கோயல் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை திரும்பப் பெறுமாறு மனுதாரர் கபில்சிபலுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட மனுவை கபில் சிபில் திரும்ப பெற்றதால், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.