இந்தியா

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

Rasus

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் ‌‌கடும் எதி‌ர்ப்புகளுக்கு இடையே நிறைவேறியது.

முன்னதாக இந்த மசோதாவை மத்திய உள்துறை‌ அமை‌ச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‌தாக்கல் செய்தார். வங்‌கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறிய‌ ‌இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு கு‌டியுரிமை வழங்க இந்த மசோதா வழி செய்கிறது. 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ‌ஆகிய நாடுக‌ளில் இருந்து இந்தியாவுக்குள் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிக்கள் ஆகியோர் குடியுரிமை பெற மசோதா‌ வழிவகுக்கிறது.

எனினும், குடியுரிமை பெறுவதற்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் என்ற நிப‌ந்தனையும் இந்த மசோதாவில் உள்ளது. எ‌னினும், ‌இந்த‌ மசோதாவிற்கு எதிர்ப்பு தெரி‌‌வித்த காங்கிரஸ் கட்சி சிறப்புக்‌குழுவுக்கு அனுப்பி திருத்தங்கள் செய்ய வேண்டும் என கூறியது. திரிணாமுல் காங்கிரஸ் உள்ளி‌ட்ட கட்சிகளும் மசோதாவை எதிர்த்தன. இந்நிலையில் ‌‌கடும் எதி‌ர்ப்புகளுக்கு இடையே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.

மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அசாம் ‌கண பரிஷத் கட்சி விலகியிருந்தது.