நமது நாட்டை யாரையும் ஆக்கிரமிக்க விடமாட்டோம் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய அவர், “நமது நாட்டை யாரையும் ஆக்கிரமிக்க விடமாட்டோம். எல்லையில் அத்துமீறல் முயற்சிகளை சீனா கைவிடாவிட்டால் இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தயங்காது. ஒப்பந்தங்களின் அடிப்படையில் சீனா செயல்பட்டால் எல்லையில் அமைதியை நிலைநாட்ட முடியும். சீனாவால் படைகள் குவிக்கப்பட்டிருப்பது 1993 மற்றும் 1996 ஒப்பந்தங்களுக்கு எதிரானது. நமது ஆயுதப் படைகள் ஒப்பந்தத்தை கடுமையாகக் கடைப்பிடிக்கும் அதே வேளையில், சீனத் தரப்புகள் முறையாக கடைபிடிக்கவில்லை. தற்போதைய சூழ்நிலையில், என்னால் விவரிக்க முடியாத முக்கியமான செயல்பாட்டு சிக்கல்கள் உள்ளன. இந்த விஷயத்தின் நிலையை மன்றம் புரிந்து கொள்ளும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.