இந்தியா

சந்திரயான்-2 ரோவர் சக்கரத்தில் அசோக சக்கரம் மற்றும் இஸ்ரோ முத்திரை !

சந்திரயான்-2 ரோவர் சக்கரத்தில் அசோக சக்கரம் மற்றும் இஸ்ரோ முத்திரை !

webteam

சந்திரயான்-2 ரோவரின் சக்கரத்தில் அசோக சக்கரம் மற்றும் இஸ்ரோ முத்திரை ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஜுலை 22ஆம் தேதி ‘சந்தியான் 2’ விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவின் அருகில் சுற்றிவருகிறது. இது நள்ளிரவு 1.30 மணிக்கு எந்நாட்டின் விண்கலமும் சென்றிராத நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்க உள்ளது. 

இந்நிலையில் நிலவின் நிலபரப்பில் ஆய்வு செய்யும் சந்திரயான்-2 விண்கலத்தின் ரோவர் சக்கரத்தில் அசோக சக்ர சின்னம் மற்றும் இஸ்ரோ முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. நிலவில் ரோவர் நகர்ந்து சென்று ஆய்வு செய்யும் போது அசோக சக்கரம் சின்னம் மற்றும் இஸ்ரோ முத்திரை நிலவின் நிலப்பரப்பில் பதியும். நிலவில் காற்று மற்றும் மழை இல்லாதததால் இந்த முத்திரை நிலவின் நிலப்பரப்பில் பல மில்லியன் காலம் இருக்கும்.