இந்தியா

21 வயது பெண்ணை ரூமில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த 50 பேர்!

21 வயது பெண்ணை ரூமில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த 50 பேர்!

webteam

கெஸ்ட் ஹவுஸில் அடைத்து வைத்து, இளம் பெண் ஒருவரை 50 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகரைச் சேர்ந்தவர் உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 21. இவர்களுக்குத் தெரிந்தவர் சுனில் குமார். பஞ்ச்குலாவில் உள்ள சுற்றுலாத்தலமான மோர்னி ஹில்ஸ் பகுதியில் சுனிலுக்கு கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. இங்கு வேலைக்கு ஆள் தேவை இருக்கிறது என்று உமாவுக்குத் தெரிய வந்தது. வேலை கேட்டார் உமா. சேர்த்தார் சுனில். மாத சம்பளம் 12 ஆயிரம் ரூபாய் என்று பேசப்பட்டது.

கடந்த 15 ஆம் தேதி வேலைக்குச் சேர்ந்தார் உமா. சேர்ந்த முதல் நாளே உமாவுக்கு மயக்க மருந்து கலந்து, மது கொடுத்துள்ளனர். அது ஜூஸ் என்று நினைத்துக் குடித்தார் உமா. பிறகு மயங்கினார். ஆனால் கொஞ்சம் சுய நினைவு இருந்தது. தனது ஆடைகளை களைந்து, சுனில்குமார் முதலில் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிந்தது. ஆனால், அதைத் தடுக்கும் அளவுக்குத் தெம்பு வரவில்லை. பின்னர் அவர் நண்பர்கள், தங்கியிருந்தவர்கள் என்று சுமார் பத்து பேர் ஒவ்வொருவராக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மறுநாளும் பத்துபேர் வரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இப்படி 18 ஆம் தேதி வரை அறைக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

இதற்கிடையே உமாவுக்கு அவர் கணவர் போன் செய்துள்ளார். போனை எடுத்த சுனில் அவர் வேலையில் இருக்கிறார், பேச சொல்கிறேன் என்று சமாளித்து வந்துள்ளார். பின்னர் ஒரு நாள் போனை எடுத்த சுதா, உடனடியாக ஊருக்கு திரும்ப வேண்டும் என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர், கெஸ்ட் ஹவுஸுக்கு வந்தார். வந்தபின் தான் இந்த கொடூரம் அவருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து பஞ்ச்குலா போலீஸில் புகார் கொடுத்தனர். அங்கிருந்த பெண் போலீசார் புகாரை வாங்க மறுத்துவிட்டனர். நீங்கள் சண்டிகரைச் சேர்ந்தவர்கள். அங்கு போய் புகார் கொடுங்கள் என்று கூறிவிட்டனர்.

இதையடுத்து உமாவும் அவர் கணவரும் சண்டிகர் கிழக்குப் பகுதி டிஎஸ்பி சதீஷ்குமாரிடம் புகார் கொடுத்தார். அதில் தன்னை தினமும் 10 பேர் வீதம் 50 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியிருந்தார் உமா. வழக்குப் பதிவு செய்த அவர், உடனடியாக அவரை  மருத்துவமனைக் கு அனுப்பி வைத்தார். மருத்துவ பரிசோதனையில் அவர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கெஸ்ட் ஹவுஸ் ஓனர் சுனில் குமாரையும் அவரது நண்பர்களையும் போலீசார் கைது செய்தனர்.

வழக்குப் பதிவு செய்ய மறுத்த பஞ்சகுலா போலீஸ் சப் இன்ஸ்பெக்டரையும் பெண் போலீசையும் இடைநீக்கம் செய்தும் உத்தரவிட்டார்.