இந்தியா

உத்தராகண்ட் : வனப்பகுதி காட்டுத் தீயில் 4 பேர் பலி - பல வனவிலங்குகளும் உயிந்த சோகம்

உத்தராகண்ட் : வனப்பகுதி காட்டுத் தீயில் 4 பேர் பலி - பல வனவிலங்குகளும் உயிந்த சோகம்

Veeramani

உத்தராகண்ட் மாநிலத்தில் 62 ஹெக்டேர் பரப்பளவுள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில், கடந்த 24 மணி நேரத்தில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். மேலும், பல வன விலங்குகளும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்து தொடர்பாக, வனத்துறையின் முதன்மை தலைமை கன்சர்வேட்டர் வெளியிட்ட விவரங்களின்படி, காட்டுத்தீ காரணமாக இதுவரை 37 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அழிந்திருக்கிறது, காட்டுத்தீயை கட்டுப்படுத்த மாநில வனத்துறையின் 12,000 காவலர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

உத்தராகண்டில், காட்டுத் தீ வழக்கமாக பிப்ரவரி மாதம் தொடங்கி நான்கு மாதங்கள் வரை தொடர்கிறது, ஆனால் இந்த முறை குளிர்காலத்தில் கூட காட்டுத்தீ ஏற்பட்டது. உத்தரகண்ட் மாநிலத்தில் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த என்டிஆர்எஃப் ( தேசிய பேரிடர் மீட்புப்படை) குழுக்களையும், ஹெலிகாப்டர்களையும் அனுப்ப மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.