இந்தியா

ரூ.20 லட்சம் கோடி : “சுய பாரதம்” திட்டங்கள் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

ரூ.20 லட்சம் கோடி : “சுய பாரதம்” திட்டங்கள் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

webteam

‘சுய பாரதம்’என்ற பெயரில் பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கு மே 17ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், நேற்று முன்தினம் பிரதமர் மோடி முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து நேற்று நாட்டு மக்களுடன் உரையாற்றினார். அப்போது மே 18ஆம் தேதிக்கு முன்பு பொதுமுடக்கம் நீட்டிப்பு தொடர்பாக அறிவிக்கப்படும் என்றும், அது முற்றிலும் மாறுபட்டு இருக்கும் எனவும் தெரிவித்தார். அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் ரூ.20 லட்சம் கோடிக்கு திட்டங்களை வகுத்துள்ளதாக தெரிவித்தார். இந்த தொகை நாட்டின் ஜிபிடி மதிப்பில் 10% ஆகும்.

இருப்பினும் திட்டங்களின் விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. திட்டங்களின் விவரங்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பார் என அறிவிப்பு வெளியாகியது. அதன்படி, அவர் தற்போது செய்தியாளர்களிடம் பேசி வருகிறார். அவர்கூறும்போது “தொலைநோக்கு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். சுயச்சார்பு பாரதம் என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என்றார். மேலும், 5 அம்ச நோக்கங்களுடன் பொருளாதார வளர்ச்சி திட்டங்கள் கவனம் செலுத்தப்படுவதாகவும் கூறினார்.