இந்தியா

இரவு நேரத்திலும் பிரேத பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி

இரவு நேரத்திலும் பிரேத பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி

Veeramani

போதிய உள்கட்டமைப்பு வசதிகள் உள்ள மருத்துவமனைகளில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகும் பிரேதப் பரிசோதனை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ள மத்திய சுகாதார அமைச்சகம், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்தால் தவிர தற்கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற வழக்குகளை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளது. இந்த புதிய நடைமுறைகள் மூலமாக உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஊக்குவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள ட்வீட்டில், "பகலில் மட்டுமே பிரேத பரிசோதனை செய்யலாம் என்று ஆங்கிலேயர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது!" என தெரிவித்திருக்கிறார்.