இந்தியா

நீதிபதி நியமனத்தில் பட்டியலினத்தவருக்கு முன்னுரிமை: வில்சன் எம்பிக்கு கிரண் ரிஜிஜூ கடிதம்

நீதிபதி நியமனத்தில் பட்டியலினத்தவருக்கு முன்னுரிமை: வில்சன் எம்பிக்கு கிரண் ரிஜிஜூ கடிதம்

sharpana

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்கும் பொழுது எஸ்சி எஸ்டி பிரிவினர் மற்றும பெண்களுக்கு உரிய முன் உரிமைகளை வழங்கும் வகையில் பரிந்துரைகளை வழங்குமாறு,  தலைமை நீதிபதிகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டிருப்பதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சனுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக வில்சன் எழுதிய கடிதத்திற்கு பதில் அளித்துள்ள கிரண் ரிஜிஜு, ”உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களில் சமூக நீதி மற்றும் சமூக ஒற்றுமையை கடைபிடிக்க வலியுறுத்திய தங்களது கடிதம் கிடைத்தது. நீதிபதிகள் நியமனத்தில் தற்பொழுது இட ஒதுக்கீடு முறை உள்ளிட்டவை பின்பற்றப் படுவதில்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். எனினும் எஸ்சி, எஸ்டி பிரிவினர், இதர சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் பெயர் பரிந்துரைகளை வழங்குமாறு தலைமை நீதிபதிகளிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது” என்று விளக்கம் அளித்துள்ளார்.