இந்தியா

சிபிஐ அதிகாரிகள் மோதல்: பரபரப்பாகும் குற்றச்சாட்டு

சிபிஐ அதிகாரிகள் மோதல்: பரபரப்பாகும் குற்றச்சாட்டு

webteam

மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. 

சிபிஐயின் இயக்குநராக இருக்கும் அலோக் வர்மா, லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய ஐஆர்சிடிசி வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளின் விசாரணையை தடுக்க முயற்சிப்பதாக சிபிஐயின் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மத்திய ஊழல் தடுப்பு ஆணையருக்கு எழுதிய கடிதம், ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

(அலோக் வர்மா)

இந்த நிலையில் இயக்குநரின் சார்பில் சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், அஸ்தானாவின் குற்றச்சாட்டுகள் உள்நோக்கம் கொண்டவை எனக் கூறப்பட்டுள்ளது. பல வழக்குகளில் ராகேஷ் அஸ்தானாவின் பங்கு பற்றி விசாரித்து வரும் அதிகாரிகளை மிரட்ட, அவர் முயற்சிப்பதாக சிபிஐயின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

(ராகேஷ் அஸ்தானா)

சிபிஐயின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இரண்டு அதிகாரிகளுக்கு மத்தியில் பொதுவெளியில் வெடித்துள்ள மோதல், அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.