பழமையான அரசு அலுவலகங்களில் உள்ள கோப்புகள் எலிகளுக்கு உணவாகி வருவதால் அதனிடம் இருந்து எப்படிதான் ஆவணங்களை காப்பாற்றுவது என ஊழியர்கள் விழிப்பிதுங்கிப் போயிருப்பார்கள்.
ஆனால் கர்நாடகாவின் கவுரிபிதனூரில் உள்ள காவல் நிலைய போலீசாருக்கு அந்த கவலை இருக்காது. ஏனெனில் போலீசாருக்கே காவலாக பீரா என்ற பூனையை நியமித்திருக்கிறார்கள் கவுரிபிதனூர் போலீசார்.
பெங்களூருவில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிக்கபள்ளாப்பூரில் உள்ள கவுரிபிதனூர் காவல்நிலையம். இங்கு எலிகளின் தொல்லையை கட்டுப்படுத்த பூனையை வளர்க்கும் முறையை போலீசார் கையில் எடுத்துள்ளனர்.
அந்த வகையில் எலிகளின் கொட்டத்தை அடக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூனை ஒன்றை காவல்நிலையத்திற்கு கொண்டு வர முடிவெடுத்து பீரா என பெயரிடப்பட்ட ஆண் பூனையை வளர்த்து வந்தனர்.
அதனால் தற்போது கவுரிபிதனூர் போலீசார் எலிகளின் தொல்லையில் இருந்து விடுபட்டிருப்பதாகவும், தங்களது பணிகளும் சுமுகமாக நடப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், பீராவை போன்று மற்றொரு ஆண் பூனையும் அந்த போலீஸ் ஸ்டேஷனில் வளர்க்கப்பட்டு வருகிறது. அந்த பூனைகளும் போலீசாரிடத்தில் அன்பாக பழகி வருவதாக கூறியுள்ளனர்.
ALSO READ: