இந்தியா

பட்ஜெட் டாப் 10

பட்ஜெட் டாப் 10

webteam

மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. அவற்றில் டாப் 10 அம்சங்கள் வருமாறு:-

1) ரூ.2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வருமானம் உள்ளோருக்கு 10%லிருந்து 5%ஆக வரி குறைப்பு

2) ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானத்திற்கான வரி மீது 10% கூடுதல் வரி

3) புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு வரிச்சலுகைகள்

4) விவசாயக் கடனாக ரூ. 10 லட்சம் கோடி வழங்க இலக்கு

5) ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் ரயில் டிக்கெட்டுகளுக்கு சேவை வரி ரத்து

6) 7,000 ரயில்களில் சூரிய ஒளி மின் திட்டம்

7) 100 நாள் திட்டத்தில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு 55%ஆக அதிகரிப்பு

8) 100 நாள் வேலைத் திட்டத்தை கண்காணிக்க விண்வெளி தொழில் நுட்பம்

9) 2025க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு

10) 2019-க்குள் அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயோ-டாய்லெட் வசதி