மேற்குவங்க மாநிலம் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி (Yuva Morcha) பொதுச் செயலாளரான பாமெலா கோஸ்வாமி 100 கிராம் கொக்கைன் கொண்டு சென்ற குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் பாஜக இளைஞர் அணியை சேர்ந்த மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த பாமெலா கோஸ்வாமி?
மேற்கு வங்காள மாநில பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி (Yuva Morcha) பொதுச் செயலாளர்தான் கைது செய்யப்பட்டுள்ள பாமெலா கோஸ்வாமி. சமூக ஊடகங்களில் மாநிலம் முழுவதும் நடைபெறுகின்ற கட்சி தொடர்பான நிகழ்வுகள் தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது அவரது பணி.
இந்நிலையில் தான் அவருக்கு போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்து பின்தொடர்ந்ததாக சொல்கின்றனர் போலீசார். அது உறுதியானதை அடுத்து இப்போது கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
“இது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாஜக மீது கொடுக்கின்ற அரசியல் அழுத்தம்” என சொல்கின்றனர் மேற்கு வங்க பாஜக தலைவர்கள்.