மகாராஷ்டிராவில் பெருவாரியான வாக்குகளைப்பெற்று மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. தேர்தல் முடிவுகள் குறித்து பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியசாமியிடம் எழுப்பிய கேள்விக்கு,
“இது எனக்கு ஆச்சர்யத்தை தரவில்லை... காரணம் இந்த தேர்தலில் யார் யார் எந்த பகுதியில் நிற்கவேண்டும் என்பதை ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்தது. ஒவ்வொரு தொகுதியிலும் சென்று பிரசாரம் செய்து, அதற்காக உழைத்ததால் பாஜக வெற்றி பெற்றது. நரேந்திரமோடியினால் பாஜக வெற்றிப்பெறவில்லை.
கட்சிக்குள்ளாக நரேந்திரமோடி மீது வெறுப்பு இருக்கிறது. அதானியின் பிரச்னைக்குப் பிறகு பிரதமர் மோடி நீண்ட நாட்கள் ஆட்சியில் இருக்கப் போவது கிடையாது. ஆர்.எஸ்.எஸ். தனது தனி பெரும்பான்மையை மகாராஷ்டிராவின் வெற்றியில் நிரூபித்துள்ளது. இந்துத்துவா கொள்கைக்காக பாஜகவை உருவாக்கி உள்ளோம். மகாராஷ்டிரா வெற்றியின் பலம் ஆர்.எஸ்.எஸ். உடையது” என்கிறார். இதைக்குறித்து மேலும் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப் பார்க்கலாம்.