இந்தியா

இந்திய பெட்ரோல் விலையை இராமாயண கதாப்பாத்திரங்களுடன் ஒப்பிட்ட சுப்ரமணியன் சுவாமி!

இந்திய பெட்ரோல் விலையை இராமாயண கதாப்பாத்திரங்களுடன் ஒப்பிட்ட சுப்ரமணியன் சுவாமி!

EllusamyKarthik

இந்தியாவில் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்திய பெட்ரோல் விலையை இராமாயண கதாப்பாத்திரங்களுடன் ஒப்பிட்டு கலாய்த்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி.

இதிகாச காப்பியமான இராமாயணத்தில் வரும் முக்கிய கதாப்பாத்திரங்களான இராமர், சீதா மற்றும் இராவணனை இதற்காக அவர் பயன்படுத்திக் கொண்டுள்ளார். 

“இராமரின் பூமி என சொல்லப்படும் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 93 ரூபாய், அதுவே சீதாவின் பூமியான நேபாள நாட்டில் 53 ரூபாய்க்கும், இராவணனின் பூமியான இலங்கையில் 51 ரூபாய்க்கும் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது” என டெக்ஸ்ட் மீமாக ட்வீட் போட்டுள்ளார் சுப்ரமணியன் சுவாமி. 

அவரது ட்வீட்டை சிலர் தவறு என கமெண்ட் போடுவதோடு “நேபாளம் மற்றும் இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் இவ்வளவு ரூபாய்” என பெட்ரோலின் விலையை பதிவிட்டு வருகின்றனர். நேபாளத்தில் 68.92 ரூபாய்க்கும், இலங்கையில் 60.60 ரூபாய்க்கும் பெட்ரோல் விற்பனையாகி வருகிறது.