இந்தியா

நாட்டிலேயே ஏழைகள் அதிகம் உள்ள மாநிலம் பீகார் - அடுத்தடுத்த இடங்களில் ஜார்கண்ட், உ.பி

நாட்டிலேயே ஏழைகள் அதிகம் உள்ள மாநிலம் பீகார் - அடுத்தடுத்த இடங்களில் ஜார்கண்ட், உ.பி

rajakannan

நாட்டில் ஏழைகள் அதிகம் உள்ள மாநிலங்கள் வரிசையில், பீகார், ஜார்கண்ட், உத்தரப்பிரதேச மாநிலங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. நிதி ஆயோக்கின் ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத்தரம் ஆகியவற்றின் அடிப்படையில் 12 முக்கிய அம்சங்களைக்கொண்டு நாடு முழுவதும், நிதி ஆயோக் ஆய்வு நடத்தியது. இதன்படி, பீகாரில் 51.91 சதவிகிதம் பேர் ஏழைகள் என்று தெரியவந்துள்ளது. ஜார்கண்ட்டில் 42.16 சதவிகிதம் பேரும், உத்தரப்பிரதேசத்தில் 37.79 சதவிகிதம் பேரும் ஏழைகள் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 36.65 சதவிகிதம் ஏழைகளுடன் மத்தியப்பிரதேசம் 4 ஆம் இடத்திலும், 32.67 சதவிகித ஏழைகளுடன் மேகாலயா ஐந்தாம் இடத்திலும் இருக்கிறது.

0.71 சதவிகித ஏழைகளுடன் கேரளா, 3.76 சதவிகித ஏழைகளுடன் கோவா, 3.82 சதவிகித ஏழைகளுடன் சிக்கிம், 4.89 சதவிகித ஏழைகளுடன் தமிழகம், 5.59 சதவிகித ஏழைகளுடன் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பட்டியலில் கடைசி ஐந்து இடங்களை பிடித்துள்ளன.

வறுமையில் உள்ளவர்களை மேம்படுத்த திட்டங்கள் வகுக்க இந்த ஆய்வு உதவும் என்று நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.