இந்தியா

ரயில்களில் பிச்சை எடுப்பது தண்டனைக்குரிய குற்றமல்ல - விதியில் மாற்றம் வரவுள்ளதாக தகவல்.!

ரயில்களில் பிச்சை எடுப்பது தண்டனைக்குரிய குற்றமல்ல - விதியில் மாற்றம் வரவுள்ளதாக தகவல்.!

jagadeesh

ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பிச்சை எடுப்பது, புகைப்பிடிப்பது போன்ற செயல்களை தண்டனைகுரிய குற்றங்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரயில்வே சட்டப்பிரிவுகளின் படி ரயில்களில் பிச்சை எடுத்தால் ஓராண்டு சிறை அல்லது இரண்டாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். அதேபோல் ரயிலில் புகைப்பிடிப்பதும் குற்றம் என்ற விதிகள் உண்டு. இவ்விரு சட்ட விதிகளிலும் மாற்றங்களைக் கொண்டு வர புதிய சட்ட திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அதன்படி பிச்சை எடுத்தல் மற்றும் புகைப்பிடித்தல் குற்றங்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படாது. ஆனால் ரயில்களில் யாரும் பிச்சை எடுக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். புகைப்பிடிப்போருக்கு அபராதம் விதிக்கப்படும், அதன் பின்னர் வழக்கு தொடரப்படாது. இந்த புதிய சட்ட திருத்தம் தொடர்பாக மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன.

ரயில்களில் பிச்சை எடுப்பது மற்றும் புகைப்பிடிப்பதை ஊக்குவிப்பது நோக்கமல்ல எனவும் மத்திய அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.