இந்தியா

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானம் தரையிறங்கும் முன் நடந்தது என்ன? வெளியான புதிய தகவல்

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானம் தரையிறங்கும் முன் நடந்தது என்ன? வெளியான புதிய தகவல்

Sinekadhara

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளாவதற்கு 1 மணிநேரம் 40நிமிடங்கள் முன்பு, பெங்களூருவில் இருந்து கோழிக்கோடு வந்த இண்டிகோ விமானத்தை தரையிறக்குவதில் சிரமம் ஏற்பட்டது. ஆனால் மாலை 5.58 மணிக்கு பாதுகாப்பாக தரையிறங்கியது.

ஆகஸ்ட் 7ஆம் தேதி கோழிக்கோட்டிலிருந்து தரையிறங்கிய அல்லது புறப்பட்ட 15 விமானங்களில், இரண்டு விமானங்கள் புலனாய்வாளர்களுக்கு சில தடயங்களை கொடுத்திருக்கிறது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX1344 விபத்து நடப்பதற்கு 1 மணிநேரம் 40 நிமிடங்களுக்கு முன்பு இண்டிகோ ஏடிஆர் 72-600 டர்போபிராப் விமானம் பெங்களூருவிலிருந்து கோழிக்கோட்டை வந்தடைந்தபோது தரையிறங்குவதில் சிரமம் மேற்கொண்டது. உடனே விமான போக்குவரத்துக் கட்டுப்பாடு (ஏடிசி) டெல்லிக்கு செல்லும் ஏர் இந்தியா விமானத்தை எடுத்துச் செல்ல அனுமதித்தது. அதேபோல் போயிங் 737-800 பேர் கொண்ட துபாய் விமானமும் மோசமான வானிலை அல்லது பிற நிலைமைகள் குறித்து அலாரம் எழுப்பவில்லை.

சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் விமான விபத்து புலனாய்வு பணியகம் வியாழக்கிழமை கேப்டன் எஸ்.எஸ். சாஹர் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. இவர் விபத்தில் சிக்கிய விமானமான போயிங் 737 என்.ஜியில் முன்னாள் நியமிக்கப்பட்ட பரிசோதகர். இந்த குழு விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து இன்னும் தகவல்களை மீட்கவில்லை என கூறியுள்ளது.

வர்த்தக பயணிகள் விமானங்களின் பாதை சரியாக கண்காணிக்கும் ஃப்ளைட்ராடார் 24 வழங்கிய தரவுகளின்படி, இண்டிகோ விமானம் கிழக்கிலிருந்து ஒரு அணுகுமுறையை உருவாக்கி, 2,200 அடியில் இறங்குவதை நிறுத்தி, 3,800 அடிக்கு ஏறி, இறுதியாக விமான நிலையத்திற்கு மேலே பலமுறை சுற்றியுள்ளது.

இதேபோல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அரபிக்கடலுக்கு மேலே, அதாவது விமான நிலையத்தின் மேற்கே வந்தவுடன் டியர்ட்ராப் அணுகுமுறையை உருவாக்கியது. அது தோல்வியுற்றவுடன் ஒரு சுற்று சுற்றி மேற்கிலிருந்து அணுகியது. இது விமான நிலையத்தின் அணுகுமுறையின் வழக்கமான திசை அல்ல. எனவே ஓடுபாதையின் குறிப்பிட்ட தூரத்தைத் தொட்டு, அதை ஓவர்ஷார் செய்து ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து விமானி உட்பட 18 பேர் உயிரிழந்தனர். இது அறிக்கை செய்யமுடியாத ஒரு நிகழ்வு என்று சாஹர் கூறியுள்ளார்.