இந்தியா

வங்கி ஊழியர்கள் 2ஆவது நாளாக வேலைநிறுத்தம்

வங்கி ஊழியர்கள் 2ஆவது நாளாக வேலைநிறுத்தம்

webteam

ஊதிய உயர்வு கோரி வங்கி ஊழியர்கள் மேற்கொண்டுள்ள இரண்டு நாள் வேலை நிறுத்தத்தால் வங்கிப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் 25 சதவீத வங்கிக் கிளைகளே இயங்கியதாக வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன. பெரும்பாலான ஏடிஎம் இயந்திரங்கள் சரியாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. கேரளா, மேற்கு வங்கம், பீகார், உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு அதிகம் இருந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 5ஆம் தேதி இந்திய வங்கிகள் சங்கத்திற்கும், ஊழியர்கள் சங்கத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், 2 சதவிகித ஊதிய உயர்வு அளிப்பதாக இந்திய வங்கிகள் சங்கம் அறிவித்ததை ஊழியர் சங்கத்தினர் ஏற்கவில்லை. ஜன்தன் வங்கிக் ‌கணக்கு திட்டம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, முத்ரா கடனுதவி என அரசின் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஓய்வின்றி பணியாற்றியதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் வங்கி ஊழியர்களின் பணிச்சுமை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும் ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஊதிய உயர்வை வலியுறுத்தி ஊழியர்கள் இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.