இந்தியா

பள்ளத்தில் விழுந்த குட்டி யானை; நீண்ட போராட்டத்திற்கு பின்பு மீட்பு - வைரலாகும் வீடியோ

பள்ளத்தில் விழுந்த குட்டி யானை; நீண்ட போராட்டத்திற்கு பின்பு மீட்பு - வைரலாகும் வீடியோ

சங்கீதா

அடர்ந்த வனப்பகுதிக்கு அருகே இருந்த பெரிய பள்ளத்தில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்த நிலையில், வனத்துறையினர் நீண்டப் போராட்டத்திற்குப் பின் மீட்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான், தனது ட்விட்டர் பக்கத்தில் விலங்குகள் குறித்து வெளியிடும் வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் தற்போது அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “குட்டி யானை ஒன்று வனப்பகுதிக்கு அருகில் இருந்த மிகப் பெரிய பள்ளத்தில் நள்ளிரவு ஒரு மணிக்கு விழுந்துவிட்டதாக தகவல் வந்தது. இதையடுத்து வனத்துறை ஊழியர்கள் சுமார் 4 மணிநேரம் போராடி பத்திரமாக குட்டி யானையை மீட்டுள்ளனர். அந்த குட்டி யானையை, அருகில் இருந்த வனப்பகுதிக்குள் குட்டி யானையின் குடும்பத்துடன் கொண்டுவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">At 1 AM teams got info of an elephant calf falling in a ditch. A long rescue operation in dead of night. By 5 AM he was rescued successfully. And then guided back to family which was in nearby forest. Team ✌️✌️ <a href="https://t.co/pLC3FFKaxj">pic.twitter.com/pLC3FFKaxj</a></p>&mdash; Parveen Kaswan (@ParveenKaswan) <a href="https://twitter.com/ParveenKaswan/status/1534170472572538880?ref_src=twsrc%5Etfw">June 7, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இந்த வீடியோவில் குட்டி யானை விழுந்த மிகப்பெரிய பள்ளம் முதலில் மண் கொண்டு சற்று மேடு ஆக்கப்பட்டது. இதையடுத்து கயிற்றால் பாதுகாப்பாக கட்டப்பட்டு, பத்திரமாக பள்ளத்தை விட்டு குட்டி யானை அதிகாலை 5 மணிக்கு மேலே கொண்டு வரப்பட்டது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் வனத்துறையினரை பாராட்டி வருகின்றனர். அண்மைக் காலமாக இந்தியாவில் வனப்பகுதியை அழித்து வருவதால், காடுகளில் இருந்து வெளியேறும் யானைகள் ரயில்வே பாதைகளிலும், மின்சாரக் கம்பிகளிலும் அடிபட்டு உயிரிழந்து வரும் நிலையில், பத்திரமாக குட்டி யானை ஒன்று மீட்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.