இந்தியா

குட்டி மானுக்கு கிடைத்த அன்பு இல்லம்

குட்டி மானுக்கு கிடைத்த அன்பு இல்லம்

webteam

வாழ்விடம் மனித பயன்பாட்டுக்கு ஆக்கிரமிக்கப்படுவதாலும், குடிப்பதற்கு நீர் கிடைக்காமலும் வனவிலங்குகள் மனிதர்களின் வசிப்பிடம் நோக்கி வருவது வழக்கமாகி வருகிறது. யானைகள், சிறுத்தைகள், கரடி போன்ற விலங்குகள் ஊருக்குள் நுழையும்போது மனிதர்களுக்கும், அவர்களின் இருப்பிடத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டு வருவதும் வாடிக்கையாகி வருகிறது.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் நகரான தரம்சாலாவின் நட்டி கிராமத்தில் தங்கள் வயலில் கண்டெடுத்த குட்டி மானை மிகவும் அன்புடன் வளர்த்து வருகின்றனர் சுலோச்சனா, அஜய் தம்பதி.

சுலோச்சனா, அஜய் தம்பதி கண்டெடுத்து வளர்க்கும் குட்டி மானின் படங்கள் நம்மை மகிழ்வித்தாலும், வாழ்விடம் தொலைத்து மனித வசிப்பிடங்களுக்கு செல்லும் வனவிலங்குகளின் நிலை மோசமானதாக இருக்கிறது என்பதே நிதர்சனம். மேலும், சுலோச்சனா அஜய் போலவே அவ்விலங்குகளை நோக்கி அனைவரும் அன்பு செலுத்துவார்கள் என்பது யதார்த்தமில்லை.