இந்தியா

‘எலக்டோரல் பாண்ட்’ மூலம் ரூ1,450 கோடி தேதி நிதி - தொடர்ந்து முதலிடத்தில் பாஜக

‘எலக்டோரல் பாண்ட்’ மூலம் ரூ1,450 கோடி தேதி நிதி - தொடர்ந்து முதலிடத்தில் பாஜக

rajakannan

தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் அதிக அளவில் நிதியைப் பெறும் கட்சிகளில் ஆளும் பாஜக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

தேர்தல் நிதி பத்திரங்கள் என்றால் என்ன?

எலக்டோரல் பாண்ட் (Electoral Bonds) எனப்படும் தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகள் முறை, மத்திய அரசால் 2017ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, இந்தப் பத்திரங்கள் மூலமாக தனி நபரோ அல்லது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களோ தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிக்கு நன்கொடை நிதி வழங்கலாம்.

இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், அந்தப் பத்திரங்களில் அதை வாங்கியவரின் பெயர் இருக்காது. அதாவது, நன்கொடை அளித்தவர் யார் என்பது தெரியாது. நன்கொடை கொடுப்பவர் யார் என்பவர் தெரியாது என்பதால், தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறும் முறைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. பெயர் தெரியாமல் நன்கொடை அளிப்பது முறைகேட்டுக்கு வழி வகுப்பதாக கூறி பலரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுதொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தேர்தல் நிதியை அள்ளும் பாஜக-காங்கிரஸ்:

2019ம் ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி பாஜக ரூ2410 கோடியை தேர்தல் நிதியாக பெற்றுள்ளது. இதில், ரூ1,450 கோடி மட்டும் தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பெறப்பட்டுள்ளது. அதாவது, 60 சதவீதம் நன்கொடையை தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது. அதேபோல், மொத்தம் 918 கோடி ரூபாயை தேர்தல் நன்கொடையாக பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி அதில், 383 கோடி ரூபாயை அதாவது 41 சதவீதத்தை தேர்தல் நன்கொடையாக பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. கட்சி நன்கொடை தொடர்பான 2018-19 நிதியாண்டிற்கான அறிக்கையை காங்கிரஸ் மற்றும் பாஜக, தேர்தல் ஆணையத்தில் சமர்பித்துள்ளன. இதன் மூலமாக இந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆண்டுக்கு ரூ1000 கோடி - அசரவைக்கும் பாஜக:

தேர்தல் நிதிப் பத்திரங்கள் முறை 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், மார்ச் 2018 நிலவரப்படி முதலாம் ஆண்டில் அரசியல் கட்சிகள் மொத்தம் 222 கோடி ரூபாயை இந்த பத்திரங்கள் மூலம் பெற்றிருந்தன. அதில், 210 கோடி ரூபாயை அதாவது 95 சதவீதம் நிதியை பாஜகவே பெற்றிருந்தது.

2013 -14 ஆண்டு முதல் நிதி சேர்ப்பதில் பாஜக ஒவ்வொரு ஆண்டு சாதனைப் படைத்து வருகிறது. 2016-17 ஆம் நிதியாண்டு முதல் பாஜக ஆண்டுதோறும் ரூ1000 கோடியை கட்சி நன்கொடையாக பெற்று வருகிறது. 2018-19 ஆம் ஆண்டில் இந்த நன்கொடை உச்சத்தை தொட்டு ரூ2410 கோடியாக உயர்ந்துள்ளது. இதில், சுமார் ரூ1450 கோடியை தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது.