எல்லையில் பதட்டம் நீடிக்கும் நிலையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என அருண் ஜெட்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நேற்று காலை புகுந்த இந்திய விமானப் படை துல்லிய தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இதனிடையே இன்று காலை இந்திய எல்லைக்குக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்து. இதனால் எல்லைப் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
எல்லையில் பதட்டம் நீடிக்கும் நிலையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி எச்சரிக்கை விடுத்துள்ளார். பின்லேடன் விவகாரத்தில் அமெரிக்கா என்ன செய்ததோ அதேபோன்ற நடவடிக்கைக்கு இந்தியா தயார் எனவும் அருண் ஜெட்லி கூறியுள்ளார். அதாவது பின்லேடனை பிடிக்க பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா நுழைந்ததுபோன்று இந்தியாவும் பாகிஸ்தானுக்குள் நுழைய தயார் என ஜெட்லி தெரிவித்துள்ளார். இதனிடையே பிரதமர் மோடி விமானப் படை தளபதியுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.