இந்தியா

ஆந்திர மாநிலத்தில் ஜூன் 10 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஆந்திர மாநிலத்தில் ஜூன் 10 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

jagadeesh

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஆந்திர மாநிலத்தில் ஏற்கெனவே அமலில் இருக்கும் ஊரடங்கை ஜூன் 10 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் இதுவரை 16 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா 2 ஆம் அலையில் மிக அதிகமாக கிழக்கு கோதாவரி மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ஜூன் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பு கடுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் வாகனப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.