street don pt desk
இந்தியா

ஆந்திரா: மிக்ஜாம் புயலில் இருந்து குட்டிகளை காப்பாற்றிய தாய் நாய்; மனிதர்களை அசரவைத்த நாய் பாசம்

ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் தாட்சாரம் கிராமத்தில் குட்டிகளை ஈன்ற ஒரு தாய் நாய் தன்னுடைய இனத்தின் தாய் பாசத்தை ஊரறியச் செய்துள்ளது.

webteam

தாட்சாராம் கிராமத்தில் ஒரு தெரு நாய் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக அந்த ஊரில் கடுமையான குளிர்காற்று வீசுயதுடன் தொடர்ந்து மழை பெய்தும் வந்தது. இதனால் தன்னுடைய குட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தனது கால்களால் குழி தோண்டி அதில், குட்டிகளை போட்டு மேலோட்டமாக மண்ணை தள்ளி மூடியது.

dog

குழிக்குள் தண்ணீர் இறங்காமல் இருக்க அந்த குழியை ஒரு பிளாஸ்டிக் ஷீட்டை பயன்படுத்தி மூடி பாதுகாத்தது. அதோடு குட்டிகள் பத்திரமாக இருக்கின்றனவா என்று மணிக்கு ஒருமுறை அந்த குழியைத் தோண்டி பார்த்தபின் மீண்டும் மண்ணை தள்ளி மூடி வைத்தது அந்த தாய் நாய். இதே போல் மூன்று நாட்களும் தன்னுடைய குட்டிகளை குளிர் காற்று, கனமழை ஆகியவற்றில் இருந்து பாதுகாத்தது தாய் நாய்.

தெரு நாயின் இந்த தாய் பாசத்தை அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் பார்த்து வியந்ததுடன் வீடியோவாக பதிவும் செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். அதுவும் தற்போது வைரலாகி வருகிறது.